அனிருத் சம்பவம்... வரவேற்பைப் பெறும் டிசி திரைப்படம்!

Wait 5 sec.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவான டிசி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம் “டிசி”. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் படமாக உருவான இதில் அனிருத்தின் பின்னணி இசைகள் அனைத்தும் கொண்டாடப்பட்டதால் படத்தின் வன்முறைக் காட்சிகளுக்கு அவர் பயன்படுத்திய இசைகள் அபாரமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.மேலும், நடிகராகவும் லோகேஷ் கனகராஜுக்கு சிறப்பான திரைப்படமாக இது அமைந்துவிட்டதாகவும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், இப்படம் வணிக ரீதியாக நல்ல வெற்றியைப் பெறலாம் என்றே தெரிகிறது. துப்பாக்கி முனையில் ஒரு ரோஜா... லோகேஷ் கனகராஜின் டிசி - திரை விமர்சனம்!The DC film featuring director Lokesh Kanagaraj is receiving good reviews.