நடிகர் அஜித் குமாரின் புதிய திரைப்படத்தில் மோகன்லால், வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பது உறுதியானது. ஆனால், அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளாக ஏகே - 64 அறிவிக்கப்படாமல் இருந்தது.ரசிகர்களின் பல மாதக் காத்திருப்புக்குப் பின் அண்மையில் இப்படத்திற்கு டேர் டெவில் (dare devil) எனப் பெயரிட்டுள்ளதாகவும் நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி இதனைத் தயாரிக்க உள்ளதையும் அறிவித்தனர். பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர்கள் மோகன்லால், வெங்கடேஷ் ஆகியோர் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மோகன்லால் ஜெயிலர், ஜெயிலர் - 2 திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெற்றியுடன் சினிமா பயணத்தைத் தொடங்கிய விஸ்மயா மோகன்லால்!Reports indicate that Mohanlal and Venkatesh will be acting in actor Ajith Kumar's new film.