திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் நீர் சுமார் 80 அடி உள்வாங்கியது.திருச்செந்தூரில் பௌா்ணமி, அமாவாசை, அஷ்டமி, நவமி உள்ளிட்ட திதி நாள்கள் மற்றும் அதையொட்டிய நாள்களில் ஒரு சில தினங்கள் காலையில் கடல் நீா் உள்வாங்குவதும், பிற்பகல் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக உள்ளது.ஆடி அமாவாசையான இன்று அதிகாலையில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் திரண்டனர்.இந்த நிலையில், ஆடி அமாவாசையான இன்று கோயில் அருகே கடல் நீா் சுமாா் 80 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால், பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. ஆனால் சிறிது நேரத்தில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.The sea water receded by about 80 feet near the Arulmigu Subramania Swamy Temple in Tiruchendur.