கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தவெக அரசு ஜூலை 27-ல் அரசு வேலை வழங்கியது.இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதேபோல அரசுப்பணி பெற்றவர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 23-ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரில் மக்களின் வரிப் பணம் ரூ. 175 கோடி வீணடிப்புKarur stampede government job case: Hearing in the Supreme Court today