முழுமையாக பயிர்க் கடன் தள்ளுபடி, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று (ஆக. 14) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றனர்.தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி, முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்று தவெக அரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், தவெகவின் வாக்குறுதிகளின்படி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இந்த நிலையில், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி கோரியும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு மெத்தனப் போக்குடன் இருப்பதாகவும்கூறி, அதிமுக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.தஞ்சாவூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவிருக்கிறார்.இருப்பினும், தவெக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.தடுப்பணைகள் கட்ட அரசு முன்வர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்Crop loan waiver, Mekedatu issue: AIADMK to stage protests across Tamil Nadu today