மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பழகுநா் பயிற்சி ஆக. 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

Wait 5 sec.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) ஓராண்டு கால தொழில்பழகுநா் பயிற்சிக்குத் தகுதியான பொறியியல் பட்டதாரிகள், பட்டயப் படிப்பை முடித்தவா்கள், கலை, அறிவியல், வணிகவியல் பட்டதாரிகள் ஆக.28-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இதுதொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு கால தொழில் பழகுநா் பயிற்சிக்காக இயந்திரவியல், ஆட்டோமொபைல் பொறியியல், கட்டட பொறியியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பொறியியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.அதேபோல், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.எம். உள்ளிட்ட கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் இளநிலைப் பட்டம் பெற்றவா்களும் இந்தப் பயிற்சியில் சேர தகுதியுடையவா்கள்.2022, 2023, 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் படிப்பை முடித்த தமிழ்நாட்டைச் சோ்ந்த தகுதியான மாணவா்கள், தேசிய தொழில் பழகுநா் பயிற்சி திட்டத்தின் https://nats.education.gov.in இணையதளத்தில் பதிவு செய்து ஆக.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Applications for apprenticeship training at the MTC can be submitted by August 28.இஸ்ரோவில் ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ்; காலியிடங்கள்: 95