காமன்வெல்த் ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23 தொடங்கின. வருகிற ஆக. 2-ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளர். இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.இந்த நிலையில், 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் இந்திய நேரப்படி, புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இந்திய வீரர் குல்வீர் சிங், வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதன் மூலம், இந்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் 10,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய தடகள வீரர் என்ற பெருமையையும் குல்வீர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2010 ஆம் ஆண்டு கவிதா ராவத் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.Gulveer Singh creates history, becoming the first Indian to win a Commonwealth Games medal in the Men's 10,000m with a brilliant silver medal finish. Watch the Commonwealth Games Glasgow 2026 LIVE & EXCLUSIVE on Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork… pic.twitter.com/6VIXZysfBJ— Sony Sports Network (@SonySportsNetwk) July 28, 2026இந்தப் போட்டியில், 27 நிமிடங்கள் 48.93 வினாடிகளில் இலக்கைக் கடந்த ஆஸ்திரேலிய வீரர் கை ராபின்சன் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தையும், 27 நிமிடங்கள் 49.78 வினாடிகளில் இலக்கை அடைந்த குல்வீர் சிங் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும், மேன் தீவைச் சேர்ந்த டேவிட் முல்லார்கி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். அதே வேளையில், நீண்ட தூர ஓட்டத்தில் புகழ்பெற்ற நாடுகளான கென்யாவும் உகாண்டாவும் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் பதக்கத்தைத் தவறவிட்டன. கென்யாவை எட்வின் குர்காட், டேனியல் எபென்யோ, இஸ்மாயில் ரோகிட்டோ கிப்குருய் ஆகிய மூன்று வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தாலும், இவர்கள் மூவரும் முறையே 4, 6, 10 ஆம் இடம்பிடித்தனர்.ஸ்காட்ஸ்டவுன் ஓடுகளத்தில் கனமழை பெய்ததால், களம் முழுவதும் மழையால் நனைந்து ஓடுவதற்கு கடுமையான சூழல் நிலவியது. இருப்பினும், வீரர்கள் அனைவரும் நிதானத்துடன் ஓடி இலக்கை அடைந்தனர். 25 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் பின்தங்கி இருந்தாலும், கடைசி சுற்றில் காட்டிய அதிரடி வேகத்தின் மூலம் 3-ஆவது இடத்திலிருந்து 2-ஆவது இடத்திற்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். Indian long-distance runner Gulveer Singh scripted history at the Commonwealth Games 2026 in Glasgow by winning silver in the men's 10,000m event, becoming the first Indian ever to secure a podium finish in the discipline.