ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரைப் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதாக தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காண ரூ. 52,000 கோடி இழப்பீடு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடரை பயன்படுத்தியவர்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படுவதாகவும், அதில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.இந்த புகாரைத் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் மறுத்தாலும், 2020 முதல் டால்கம் பேபி பவுடர் உள்ளிட்ட சில பொருள்களின் விற்பனையை நிறுத்தியது. ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதிலும் தொடரப்பட்ட கிட்டத்தட்ட 76,000 வழக்குகளும் நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டவர்களுக்கு மொத்தம் 5.5 பில்லியன் டாலர் (ரூ. 52,600 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக் கொள்வதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ், இந்த வழக்குகள் அடிப்படையற்றவை என்றும், ஆனால் ஒரு முடிவைக் காணும் நோக்கில் நிறுவனம் சமரசத்துக்கு முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.வருகின்ற 2027 ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியன் டாலரை செலுத்தவும், மீதமுள்ள தொகையை 2028-க்குள் செலுத்தவும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இருப்பினும், நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ள கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவிகிதம் பேர் இதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் ஒப்பந்தம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.Rs. 52,000 crore compensation! Johnson & Johnson announces—what is it for?ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் சடலமாகமீட்பு