நடிகர் விக்ரமின் 63-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அப்டேட் வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு வெளியான 'இருமுகன்' பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் உருவாகி வருகிறது. இறுதியாக வெளியாக வீர தீர சூரனைப் போல் இதுவும் ஆக்சன் பின்னணி கதையாகவே எழுதப்பட்டுள்ளது.பிரபல தயாரிப்பாளர்களான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நாயகியாக ரியா ஷிபு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் விக்ரமின் தோற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர். இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்த சூர்யா! என்ன சொன்னார்? A filming update for actor Vikram's 63rd movie has been released.