பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து முரண் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து செயல்பட்டனா்.சட்டப்பேரவைத் தோ்தலிலும் தனித்தனியாக இரு அணிகளாக பாமக போட்டியிட்டது. அன்புமணி தரப்பிலிருந்து 4 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ள நிலையில், அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்த ராமதாஸ், இனி கட்சியை அன்புமணி பார்த்துக் கொள்வார் எனத் தெரிவித்தார்.இந்த நிலையில், சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் அரங்கில் பாமக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.இந்த கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அன்புமணி அணியில் இருந்த வடிவேல் ராவணன் பொதுச் செயலராகவும், திலகபாமா பொருளாளராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.Anbumani re-elected as PMK President - Who are the General Secretary and Treasurerடி.ஆர். பாலுவின் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!