ஈரான் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருவதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கியுள்ளன.இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.இதனிடையே, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உலகின் பலநாடுகள் முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் குறித்து டிரம்ப் பேசியதாவது:இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கம்போல, ஈரானிய அதிகாரிகள் தங்களுடைய வாக்குறுதிகளை மீறுகின்றனர். ஈரான் மீதான நம்பிக்கை எனக்கு குறைந்து கொண்டே வருகிறது. அவர்கள் (ஈரான்) பொய் சொல்கிறார்கள், தகவல்களைத் திரித்துக் காட்டுகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு உடன்படுகிறார்கள். ஆனால், அடிக்கடி அதனை மீறுகிறார்கள்.ஈரான் பலவீனமடைகிறது. ஒருவேளை தற்போது சற்று வலிமை பெறலாம். ஆனால் மீண்டும் பலவீனமடைந்து, இறுதியில் முழுவதுமாக மறைந்துவிடும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.ஈரான் விமான நிறுவன முகவராகச் செயல்படும் இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடைUS President Donald Trump has stated that confidence in Iran is waning.