உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். விடுமுறை நாளான சனிக்கிழமை ஆவலுடன் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு ஆகிய வனப்பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 4 மாதங்களாக நீரின்றி வறண்ட சுருளி அருவிக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் சென்று குளிக்க சனிக்கிழமை தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா். தற்போது மேகமலை அதைச் சுற்றிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. உத்தமபாளையம் வட்டாரம் அதை சுற்றிய பகுதியில் பெய்த இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Very heavy rain in Meghamalai: Tourists banned from bathing at Suruli Fallsமேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை! விவசாயிகள் கவலை!