காமன்வெல்த் ஈட்டி எறிதலில் முதல்முறையாக 2 பதக்கங்கள்..! நீரஜ் சோப்ரா வெள்ளி!

Wait 5 sec.

கிளாஸ்கோ காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியர்கள் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார்கள். இதில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.காமன்வெல்த் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி வென்றார். மற்றுமொரு இந்தியரான யஷ் வீர் சிங் 85.41 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலம் வென்றார். இலங்கை வீரர் ருமெஷ் தரங்கா பதிராகே 89.75 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ரா, யஷ் வீர் சிங் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார்கள். காமன்வெல்த் ஈட்டி எறிதலில் முதல்முறையாக இரண்டு இந்தியர்கள் பதக்கம் வென்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். இந்தியாவுக்கு 20ஆவது பதக்கத்தையும் மற்றுமொரு இந்தியர் 21ஆவது பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இதில் 5 தங்கம், 11 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.Result Update: Athletics, Men's Javelin ThrowHISTORIC DOUBLE PODIUM FOR BHARAT! TOPS Core athlete Neeraj Chopra wins Silver with a best throw of 85.83m, while Khelo India athlete Yash Vir Singh claims Bronze with 85.41m in the Men's Javelin Throw.For the first time in… pic.twitter.com/nFYmBRtAHW— SAI Media (@Media_SAI) July 31, 2026வரலாறு படைத்த அஸ்மிதா, ஹா்ஷ் சிங்: காமன்வெல்த் ஜூடோவில் முதல் தங்கம்CWG 2026: Men's Javelin Throw Historic double podium for bharat!