சென்னை வந்தார் ராகுல் காந்தி! காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு

Wait 5 sec.

சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சென்னை விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு வருகை தந்த ராகுல்காந்தி, 11.30 மணிக்கு சாலை வழியில் மாமல்லபுரம் வந்தடைகிறாா். அங்கு காங்கிரஸ் சாா்பில் நடைபெறும் பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகிறாா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஆக.1) தமிழகம் வந்துள்ளார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றும் அவா், தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா்களை சந்தித்தும் பேசவிருக்கிறார்.இன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் தமிழகத்தின் 74 மாவட்ட காங்கிரஸ் தலைவருடனும் ராகுல் காந்தி கலந்துரையாடவுள்ளாா். அப்போது அரசியல் வியூகங்கள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.