போலி கணக்குகளைத் தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு முறையை ஸோஹோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்த அம்சத்தை அரட்டை செயலியில் ஸோஹோ கொண்டுவந்துள்ளது. குறுஞ்செய்தி அனுப்பும் செயலியில் முதல்முறையாக ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு கொண்டுவரப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஸோஹோவின் அரட்டை செயலிக்கு படிப்படியாக பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயனர்களைக் கவரும் வகையில் கூடுதல் அம்சங்களை அறிமுகப்படுத்துவதோடு, நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியில் ஸோஹோ களமிறங்கியுள்ளது.இதன் எதிரொலியாக பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது.இந்த விருப்ப அம்சம், பயனர்கள் ஆதார் செயலி மூலம் தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து, நிரந்தரமான பச்சை நிற சரிபார்ப்புப் பேட்ஜைப் பெற அனுமதிக்கிறது. மற்ற பயனர்கள் உண்மையான கணக்குகளை அடையாளம் காண உதவுவதோடு, சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்களிலிருந்து மட்டுமே செய்திகளைப் பெறத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் தேவையற்ற செய்திகளை வடிகட்டவும் உதவுகிறது.ஸோஹோ நிறுவனத்தின் உளகளாவிய தலைமை பொறுப்பாளரான ஜெர்ரி ஜான் பேசுகையில், ஆன்டிராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் மற்றும் மேக் தளங்களிலும் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது. ஆதார் சரிபார்ப்பு அம்சத்தை அறிமுகம் செய்வதன் மூலம் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறோம் என்றும், பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை போலி கணக்குகளில் இருந்து தற்காத்து பயனுள்ளதாக மாற்றுகிறோம் எனவும் குறிப்பிட்டார். ஆதார் சரிபார்ப்பு செய்வது எப்படி?பயனர்கள் தங்கள் கணக்கில் உள்ள செட்டிங் ஆப்ஷனில் சென்று கெட் வெடிஃபைட் கிளிக் செய்ய வேண்டும். பின்னர், ஆதார் செயலியைப் பயன்படுத்தி சரிபார்ப்பு முறையை நிறைவு செய்கிறது. 2021 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த செயலி, தமிழ், ஹிந்தி, குஜராத்தி உள்பட 10 இந்திய மொழிகளைக் கொண்டுள்ளது. வாட்ஸ்ஆப் வெப்பிலும் இனி விடியோ கால்! புதிய அம்சம் அறிமுகம்!To prevent fakes Aadhaar now mandatory to use the Zoho's arattai app!