அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமையட்டும்; ரஹானேவுக்கு புஜாரா வாழ்த்து!

Wait 5 sec.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஜிங்க்யா ரஹானேவுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஜூலை 30) அறிவித்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்த அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள அஜிங்க்யா ரஹானேவுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய சித்தேஸ்வர் புஜாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.Congratulations on a career you can be incredibly proud of, Ajinkya! It has been an honour sharing the dressing room with you over the years; and building partnerships and memories on and off the field that will always fondly remember. Wishing you and the family the absolute… pic.twitter.com/dnRcOta2es— Cheteshwar Pujara (@cheteshwar1) July 30, 2026இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் நம்பமுடியாத விதத்தில் அமைந்துள்ள உங்களது பயணம் குறித்து நீங்கள் பெருமை கொள்ளலாம். உங்களுடைய இந்த சிறப்பான சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு எனது வாழ்த்துகள். பல ஆண்டுகளாக உங்களுடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாடியதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன்.களத்துக்கு உள்ளே மட்டுமின்றி, களத்துக்கு வெளியேயும் உங்களுடான நினைவுகள் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கும். வாழ்க்கையில் உங்களுக்கு அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.இந்திய அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே செயல்பட்டபோது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்ன் மற்றும் காபா டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.Former Indian player Cheteshwar Pujara has wished Ajinkya Rahane a bright future following his announcement of retirement from international cricket.அதிரடி முன்னேற்றம்... டி20 தரவரிசையை அசைத்துப் பார்த்த வைபவ் சூர்யவன்ஷி!