கரப்பான் பூச்சி க.டசிக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடையக்கூடும் என நேஷனல் கான்பரன்ஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 20ல் சிஜேபி போராட்டம் நடத்தியது. இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜூன் 25-ல் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 1 கோடி, பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் மத்திய அரசு தெரிவிக்கப்பட்ட நிலையில், சிஜேபியால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஆனால், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மாறாக அவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினால், இந்தப் போராட்டம் இன்னும் பெரிதாகி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.