இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரின் ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராக ரியான் டென் டொஸ்சாட்டும், ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப்பும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவரின் பிசிசிஐ ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாகவும், அவர்களது ஒப்பந்தத்தை நீட்டிக்கப்படவில்லை எனவும் பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா பேசியதாவது: இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட்டின் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் ஜூன் 10 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப்பின் பதவிக்காலம் முடிந்தபின், ஓராண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தமும் ஜூன் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளரை நியமிக்க ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றார்.இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.Ten Doeschate and T Dilip's contracts have ended, new fielding coach to be named soon: Saikiaஎன்னுடைய பந்துவீச்சு தொடர்பாக கேள்வி கேட்பது பேட்டர்கள் வேலையா? கோபமடைந்த உஸ்மான் தாரிக்!