கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி சௌதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி சௌதரி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.இறுதிச்சுற்றில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இங்கிலாந்து வீராங்கனை ரூபி வொயிட்டை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.முன்னதாக, குத்துச்சண்டையில் 54 கிலோ எடைப்பிரிவில் ப்ரீத்தி பவாரும், 57 கிலோ எடைப்பிரிவில் ஜாஸ்மின் லம்போடியாவும் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. Indian boxer Sakshi Chaudhary has won the gold medal in boxing at the ongoing Commonwealth Games in Glasgow.உடல்நிலையுடன் போராட்டம் முதல் தங்கப் பதக்கம் வரை... ஜாஸ்மினின் வெற்றி ரகசியம்!