நயன்தாரா, கவின் நடிப்பில் வெளியாகவுள்ள ஹாய் படத்தின் மூன்றவாது பாடல் புரோமோ வெளியாகவுள்ளது.அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.இதைத் தொடர்ந்து, தணிக்கை வாரியம் இத்திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.இந்த நிலையில், படத்தின் மூன்றாவது பாடல் புரோமோ நாளை வெளியாகும் என படக்குழு இன்று (ஜூலை 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும், நடிகர் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் இதே நாளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.He did nothing wrong. But the world wronged him.#PachaPulla - third single from #HiMovie out tomorrow.A @jenmartinmusic Musical. A film directed by @VishnuEdavan1.Hi :) smiling in theatres worldwide from August 14, 2026.@Kavin_m_0431 @ZeeStudios_ @zeestudiossouth… pic.twitter.com/NdLeeISTzj— Seven Screen Studio (@7screenstudio) July 29, 2026ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்! The third song from the upcoming film Hi, starring Nayanthara and Kavin, is set to be released.