ஐஷர் மோட்டார்ஸ் முதல் காலாண்டு லாபம் 21.4% உயர்வு!

Wait 5 sec.

புதுதில்லி: ஐஷர் மோட்டார்ஸ், ஜூன் வரையான முதல் காலாண்டில், சாதனை அளவிலான விற்பனை செய்ததன் காரணமாக அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 21.4 சதவீத உயர்ந்து ரூ. 1,462.51 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ. 1,205.22 கோடி லாபத்தைப் பதிவு செய்தது.மொத்தம் ரூ. 2,500 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான 'கிரீன்ஃபீல்ட்' விரிவாக்கத்தின் முதல் கட்டத்திற்கு ரூ. 1,225 கோடி முதலீடு செய்ய நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ. 5,041.84 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 6,632.42 கோடியாக உயர்ந்துள்ளது.ஆய்வுக்கு உட்பட்ட காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவு ரூ. 5,341 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இது ரூ. 4,052.02 கோடியாக இருந்தது.நிறுவனத்தின் இருசக்கர வாகனப் பிரிவான, ராயல் என்ஃபீல்ட், அதிகபட்சமாக ஒரு காலாண்டில் 3,32,940 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட 2,61,326 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீத வளர்ச்சியாகும்.சுமார் ரூ. 2,500 கோடி மதிப்பிலான திட்டமிடப்பட்ட முதலீட்டின் மூலம், எதிர்காலச் சந்தை தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உற்பத்தித் திறனை வலுப்படுத்தியுள்ளது. இந்த முதலீடு மூலம், எதிர்காலச் சந்தை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் வலுப்படுத்தப்படும்.ஆந்திராவில் புதிய உற்பத்தி ஆலை விரிவாக்கத்தின் முதல் கட்டத்திற்கு ரூ. 1,225 கோடி முதலீடு செய்ய ஐஷர் மோட்டார்ஸின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆலை முழு அளவில் செயல்படத் தொடங்கும்போது, ​​ஆண்டுக்குக் கூடுதலாக 4.5 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.Eicher Motors Ltd reported a 21.4 per cent rise in consolidated profit after tax.டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!