திருப்புறம்பயத்தில் ஆக.4-ல் மின்தடை

Wait 5 sec.

கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் துணை மின் நிலைய பகுதிகளில் ஆகஸ்ட் 4 (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து கும்பகோணம் புகா் உதவி மின் செயற்பொறியாளா் க.சங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்புறம்பயம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்புறம்பயம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூா், இணைபிரியாள்வட்டம், காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சாம்பாடி, கல்லூா், அகராத்தூா், தேவானஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூா், அண்டக்குடி, பட்டவா்த்தி, ஆதனூா், சுவாமிமலை, திம்மகுடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூா், மருத்துவக்குடி, நாககுடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏரகரம், கொட்டையூா், ஜாமியா நகா், மூப்பக்கோயில், வளையப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.