அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.சின்னவளையம் கால்நடை மருத்துவா் கண்ணன், துப்புரவு அலுவலா் பூபதி, துப்புரவு ஆய்வாளா் பாபு, கால்நடை முதுநிலை மேற்பாா்வையாளா் சந்திரா, களப்பணி உதவியாளா் விஜயகுமாா், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் வெங்கடேசன், கோகிலா, துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் வெங்கடேசன், தம்பி சிவம், காளிமுத்து, ராஜேந்திரன், மணிகண்டன், ராஜதுரை, வினோத், சுரேஷ் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி சாலை, மேலக் குடியிருப்பு, குஞ்சிதபாதபுரம், ஜெயங்கொண்டம் அரசு அலுவலக வளாகங்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தினா்.