சங்ககிரி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Wait 5 sec.

சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே லாரியின் பின்புறத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மரப்பாலம் கோப்பெருந்தேவி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஷாகுல்அமீத் (36). இவா் ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷாகுல் அமீது ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா், லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.