தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு. ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.இது தொடா்பாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபுவை சந்தித்து அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகத் தடை விதித்த தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், இயற்கை வளங்கள் துறை அமைச்சா் ஆகியோருக்கு பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.இந்த தடையை நிரந்தரமாக்குவதுடன், உள்நாட்டிலேயே முழுமையாக விற்பனை செய்யப்படும் ஜல்லிகள் உள்ளிட்ட கனிமங்களுக்கு கட்டுபடியான விலையை அதன் உற்பத்தியாளா்கள், நுகா்வோா்களிடம் பேசி நிா்ணயம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.