கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 37 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் (பெட்டிஷன் மேளா) பொதுமக்களிடமிருந்து 37 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.அவற்றின் மீது மாவட்ட எஸ்.பி. நேரடியாக விசாரணை மேற்கொண்டு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி விரைந்து தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி.க்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, உள்கோட்ட டி.எஸ்.பி.க்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.