தைபே ஓபன் பாட்மின்டன் சூப்பர் 300 போட்டி மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனை தன்வி சர்மா பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். சீன தைபே தலைநகர் தைபேயில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மாவும் வியத்நாமைச் சேர்ந்தவருமான துய் லின் நுயென் உடன் மோதினர்.இதில் 17 வயதான இந்திய வீராங்கனை தன்வி வெறும் 33 நிமிஷங்களில் 21-16, 21-16 என்ற கேம் கணக்கில் தைபே வீராங்கனை ஹுவாங் யு சன்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.இந்தத் தொடரின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (17 ஆண்டுகள் 222 நாள்கள்) சாம்பியன் பட்டம் வென்றவராக தன்வி வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். முன்னதாக, 2006ல் 17 ஆண்டுகள் 287 நாள்களில் லீ யோங் டே இந்த சாதனையை வைத்திருந்தார்.இந்தத் தொடரில் முன்னதாக, இந்தியாவின் சாய்னா நேவால் 2008ல் வென்றிருந்தார். தற்போது, 18 ஆண்டுகளுக்குப் பிறகு தன்வி வென்றுள்ளார். நான்காவது இந்திய மகளிராக சூப்பர் 300+ல் பட்டம் வென்றுள்ளார்.ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றிருந்த தன்வி, கடந்த 2024-ல் பாட்மின்டன் ஆசியக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாார். கடந்த 2 ஆண்டுகளில் பஞ்சாபைச் சோ்ந்த தன்வியின் ஆட்டம் சீராக வளர்ச்சியைக் கண்டுள்ளது.கடந்த 2025-ல் ஒடிஸா மாஸ்டர்ஸ் 100, குவஹாட்டி மாஸ்டர்ஸ் 100 போட்டிகளில் ரன்னரான தன்வி, 2024 பான் சர்வதேசப் போட்டி, 2025 டென்மாா்க் சேலஞ்சரில் பட்டம் வென்றார். மேலும் கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் சூப்பர் 300-லும் ரன்னர் ஆக வந்ததும் குறிப்பிடத்தக்கது. 17 YEARS OLD. RECORD-BREAKER. CHAMPION. Tanvi Sharma wins the Taipei Open 2026 to become the youngest champion in tournament history and only the 4th Indian Women's Singles shuttler to lift a Super 300+ trophy The future is here!#Badminton #TaipeiOpen2026 pic.twitter.com/Az96c3U9n8— BAI Media (@BAI_Media) August 2, 202617-year-old Tanvi Sharma goes for gold against Nguyen Thuy Linh .#BWFWorldTour #TaipeiOpen2026 pic.twitter.com/QUlZuTSRUc— BWF (@bwfmedia) August 2, 2026கால்பந்து - கிரிக்கெட்: ஜூட் பெல்லிங்கமைச் சந்தித்த ஃபாத்திமா சனா, உஸ்மான் தாரிக்!Taipei Open: Tanvi Sharma makes history by becoming a champion at a very young age!