தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர்

Wait 5 sec.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், கர்நாடக முதலவர் டி.கே. சிவகுமார் கர்நாடகத்திற்காகத்தான் பேசுவார். அவருக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமல்ல. எனக்கு தமிழ்நாடு நலன்தான் முக்கியம். முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் தவறு இல்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாடும் கர்நாடகாவும் இந்தியா - பாகிஸ்தான் கிடையாது. பேசி தீர்க்கும் நிலையை உருவாக்க வேண்டுமென முதல்வர் விஜய் நினைப்பதே பாராட்டுக்குரிய விஷயம். இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை. அரசியல் செய்வதுதான் முக்கியமாக உள்ளது. மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும். திமுக கூட்டணியை விட்டு விலகினாலும் தொகுதி மறுவரையறை பிரச்னையில் காங்கிரஸ் மாறவில்லை. தொகுதி மறுவரையறையை எதிர்த்து முன்பு நகலை எரித்தது யார்? பட்டாசு வெடித்தது யார்?. தொகுதி மறுவரையறையில் எட்டப்பர்கள் பாஜக, அதிமுக, பாமகதான். துரோகம் செய்வோரே எட்டப்பர்கள். ராகுல் அதைத்தான் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு மிகவும் முக்கியமானது. இது தமிழகத்துக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். Manickam Tagore has stated that Cauvery is not important to the political parties in Tamil Nadu.நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!