இந்திய வீரர் அபிஷேக் சர்மா 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம் ஆடி இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த அபிஷேக் சர்மா (25 வயது) ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி பிரபலமானார். தற்போது, இந்திய டி20 அணியின் தொடக்க வீரராகவும் விளையாடி வருகிறார்.பஞ்சாபில் மாவட்ட அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில்தான் அபிஷேக் சர்ம இந்த அபாரமான ஆட்டத்தை ஆடியுள்ளார். அமிர்தசர்ஸ் மென் சீனியர் அணிக்காக விளையாடும் அபிஷேக் சர்மா தாரன் தாரன் மென் சீனியர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்துள்ளார். இதில் 25 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் அடங்கும். அமிர்தசர்ஸ் அணி 50 ஓவர்களில் 533/8 ரன்கள் குவித்தது. இதில் அபிஷேக் சர்மா 233, அபய் சௌதரி 91 ரன்கள் குவித்தார்கள். சமீபகாலமாக டி20 தொடர்களில் சுமாராக விளையாடி வந்த அபிஷேக் சர்மா மீண்டும் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்க கடினமாக உழைத்து வருகிறார். அடுத்ததாக, இந்திய அணி அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகளுடன் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. ABHISHEK SHARMA MAKES A STATEMENT - He smashed 233 runs from just 91 balls with 15 fours & 25 sixes against Tarn Taran Men Sr in the One Day District match pic.twitter.com/QV4k83Oo5e— Johns. (@CricCrazyJohns) August 2, 2026Abhishek Sharma's rampage: 233 runs off 91 balls!