இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ள ஸ்டீஃபன் பிளெமிங்தான் காரணம் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பென் ஸ்டோக்ஸ் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங்கும், கேப்டனாக ஜோ ரூட்டும் நியமிக்கப்பட்டனர்.இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ள ஸ்டீஃபன் பிளெமிங்தான் காரணம் என ஜோ ரூட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது."Being brutally honest he was a big reason why I wanted to do it."Root FlemingClick below to hear the full interview:— England Cricket (@englandcricket) August 1, 2026இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், ஸ்டீஃபன் பிளெமிங் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதுதான் நான் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மிகப் பெரிய காரணமாக அமைந்தது. அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்.ஒரு வீரராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் பிளெமிங் பல அற்புதமான விஷயங்களை செய்துள்ளார். அவரிடம் பரந்த அனுபவம் இருக்கிறது. அவருடன் இணைந்து இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன் என்றார். Joe Root has stated that Stephen Fleming is the reason he accepted the England captaincy again.சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும்: மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன்