‘நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கை துணை நிற்கும்’ - அமைச்சர் கீர்த்தனா

Wait 5 sec.

‘நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கை துணை நிற்கும்’ என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.காவிரியின் குறுக்கே, மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அதற்குத் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் சூழலில்தான் முதல்வர் விஜய், கர்நாடகம் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆக. 3 ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய்யின் பயணம் செல்வது தொடர்பாக தகவல் வெளியானதும் தமிழ்நாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். காவிரி ஒழுங்குமுறைக்குழு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி நீர் திறக்க பரிந்துரைத்ததை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அதற்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்த நிலையில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளத்தில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலம், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 13,768 கனஅடி தண்ணீர் சனிக்கிழமை இரவு முதல் வெளியேற்றப்பட்டது. இதன் அளவு 25,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், காவிரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.அந்தப் பதிவில், “இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்கிறது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளது.எத்தனை இடையூறுகளும், எத்தனை தடைகளும் வந்தாலும், மக்களின் நலனையே சிந்திக்கும் நம் முதல்வர் ஜோசப் விஜய் அண்ணன் அவர்களின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை நிற்கிறது.மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. இதன்மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை, சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை மனமார வேண்டுகிறேன். ‘நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்’-” எனக் குறிப்பிட்டுள்ளார்.Minister Keerthana has stated, "Nature stands by those who possess a good heart and a mindset focused on the welfare of the people."