எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் திருமணம், மழலைப் பாக்கியம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் நல்லபடியாக முடியும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பீர்கள்.அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.