காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டையில் 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பவார் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இந்தியா இதுவரை இந்த காமன்வெல்த் தொடரில் 17 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளன. இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ப்ரீத்தி பவார் 54 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதியில் ஜிம்பாப்வேயின் கேத்தரின் ம்வாபே உடன் மோதினார். இந்தப் போட்டியில் ஐந்து நடுவர்களின் மதிப்பெண்களும் ப்ரீத்தி பவாருக்கு ஆதரவாகவே வழங்கியதால், 5-0 என்ற அபார வெற்றியைப் பதிவு செய்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டியில் ஆக.1ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோ உடன் மோதவிருக்கிறார். இது குறித்து ப்ரீத்தி கூறியிருப்பதாவது: நான் தயாராகியிருந்தது போலவே செய்து முடித்ததுக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் எனது சிறந்த செயல்பாட்டை வழங்கி தங்கம் வெல்ல முயற்சிப்பேன். எதிராளியைக் குறைவாக மதிப்பிட மாட்டேன் என்றார்TOPS Core athlete Preeti stormed into the Women's 54kg Final at the Commonwealth Games 2026 with a commanding 5–0 unanimous decision victory over Catherine Mwape of Zambia in the semi-finals.Congratulations, Preeti! Wishing her the very best for the gold medal bout against… pic.twitter.com/hmUhkxd4Pz— SAI Media (@Media_SAI) July 31, 20264 வயது குழந்தைக்குத் தாய், பிஎச்டி ஆய்வு... காமன்வெல்த் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற சீமா! CWG Boxing: Preeti Pawar through to finals with dominating win