விஜய், கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமாரின் அறிவிப்பால்யாருக்கு என்ன லாபம்?

Wait 5 sec.

கர்நாடகம் செல்லவிருந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பயணம், ஏற்கெனவே பலத்த விவாதப்பொருளாகியிருந்த நிலையில், திடீரென விஜய்யைக் கர்நாடகம் வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.காவிரியின் குறுக்கே, மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அதற்குத் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் சூழலில்தான் முதல்வர் விஜய், கர்நாடகம் செல்லத் திட்டமிட்டிருந்தார்.ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய்யின் கர்நாடக பயண செய்தி வெளியானதுமே, தமிழ்நாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கர்நாடகத்திலும் சில அமைப்புகள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.ஆனால், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், காவிரி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம், முக்கிய அதிகாரிகள் கூட்டம் என பரபரப்பாகக் காணப்பட்டார். பெங்களூரில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. இரு மாநில முதல்வர்கள் சந்திப்புக்கு தயாராவதாகவே அது பார்க்கப்பட்டது.இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பகல் 2 மணியளவில், பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே. சிவகுமார், தமிழ்நாட்டுக்குத் தண்ணீத் திறந்துவிடும்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துக் கர்நாடகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.அப்போதே, தமிழக முதல்வர் விஜய்யின் பயணம் கேள்விக்குறியாக மாறியது. எப்போது கர்நாடகம் மேல்முறையீடு செய்கிறதோ, அப்போதே, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.இப்படி ஊகங்கள் எழத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டி.கே. சிவகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப மளமளவென சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். அது கர்நாடகத்துக்கு பயனுள்ளதாக இருக்குமோ, இருக்காதோ, ஆனால், தமிழக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும், தமிழக மக்களுக்கும் நிச்சயம் நன்மை பயக்கும் என்றே கூறப்படுகிறது.அப்படி என்னதான் சொன்னார்? தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இன்னும் அவரது பயணம் உறுதியாகவில்லை. அவருடன் தொலைபேசியில் பேசியபோது, இரு மாநிலங்களின் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்துப் பேசினேன்.மேக்கேதாட்டு, காவிரியில் தண்ணீர் திறப்பு என தற்போது கர்நாடகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் வருவது சரியாக இருக்காது. அவர் வரும்போது கர்நாடகத்தில் போராட்டம் நடந்தால் எப்படி சமாளிப்பது? எங்களின் விருந்தினராக வரும்போது அவருக்கு பிரச்னை இருக்கக் கூடாது. இரு மாநிலங்களும் பலன் பெறும் உரிய சூழல் வரும்போது இருவரும் நேரில் சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார்.காவிரி பிரச்னை குறித்து பேசுவதற்காக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3, திங்கள்கிழமை பெங்களூர் செல்லவிருந்த நிலையில், கர்நாடக முதல்வரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணம் கிட்டத்தட்ட ரத்தானதாகவே கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி இதுவரை தமிழக அரசு சார்பில் எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை (பயணம் செல்லப் போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை).எனினும், முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வது என்ற முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் என்பது விவாதத்துக்குரியதாகவே இருந்தது. காரணம்காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம், காவிரி நீர் மேலாண்மை ஆணையங்கள் உள்ளன. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையேயான பல பிரச்னைகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் வலுவாக உள்ளது. எனவே, இரு தலைவர்களின் சந்திப்பு வெறும் அரசியல் ஆதாயமாகவே பார்க்கப்படும். அரசியல் அழுத்தம்தமிழக முதல்வர் விஜய், கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், கர்நாடகம் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் இருந்தால் - காவிரி நீர் திறக்கப்படாமல் இருந்தால் அது முதல்வர் விஜய்க்கு மிகப் பெரிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.நிலைப்பாட்டில் மாற்றம்மேக்கே தாட்டு பகுதியில் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு பல ஆண்டு காலமாக உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. மேலும், காவிரி நீர் விவகாரத்திலும் தமிழகம் விட்டுக் கொடுக்கும் இடத்தில் இல்லை. கர்நாடகமும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாகத்தான் இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க, பேச்சு நடத்தினால், அது நிலைப்பாட்டிலிருந்து மாறுவதற்கான அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று பார்க்கப்படுகிறது.எதிர்ப்புக்கு இடையேதமிழ்நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்கள், விஜய்யின் பயணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியிருக்கிறார்கள். பெங்களூரில் முதல்வர் வருகையை முன்னிட்டு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, முதல்வரின் பயணத்தின்போது, போராட்டம் வன்முறையாக மாறினால் அது சட்டம் - ஒழுங்கைப் பாதிக்கலாம். ஏற்கெனவே இரு மாநில எல்லையில் காவிரி பிரச்னையால் அவ்வப்போது பதற்றம் ஏற்படும் சூழலில் இது நிலைமையை மேலும் விபரீதமாக்கலாம்.எனவே, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் இந்த நேரடியான அறிவிப்பு, மறைமுகமாக, தமிழகத்துக்கும், அரசுக்கும் நன்மை பயக்கக் கூடியதான ஒன்றே எனக் கருதப்படுகிறது. Regarding the request made by Karnataka Chief Minister D.K. Shivakumar for Tamil Nadu Chief Minister Vijay not to visit Karnataka in the current climate...தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் என்ன சொல்கிறார்?