தமிழகம் முழுவதும் வரும் 17 ஆம் தேதி முதல் முழுமையான ஆன்லைன் பத்திரப்பதிவு முறை தொடங்கப்பட உள்ளதாக பத்திரப்பதிவு துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் செய்தியாளா்களுடன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் ஆன்லைன் முறையில் முழுமையான பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை வரும் 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளாா். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் துறை சாா்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். ஆன்லைன் முறையில் முழுமையாக பத்திரப்பதிவு செய்வதற்கான பயிற்சிகளும் அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடி, ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை அவா்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.முன்னதாக, சேலம் அம்மாபேட்டை அருகே தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், முன்னாள் மாணவா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முன்னாள் மாணவா்கள் அணி சாா்பில் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் கலந்து கொண்டாா். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கயிறு திடீரென அறுந்ததால் அமைச்சா் நிலைதடுமாறி தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.Online Property Registration from August 17: Minister T. Lokesh Tamilselvanஆக. 4,5,6 தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்