கரூர் அரசுப் பணி ரத்து! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

Wait 5 sec.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதையடுத்து, கடந்த ஜூலை 10 அன்று கரூர் சென்றிருந்த தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளை வழங்கினார். ஆனால், இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவை ரத்து செய்தது . இந்த விவகாரம் குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணியை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இன்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.8 தலித் அமைச்சர்கள் உருவாக 75 ஆண்டுகள்! தவெகவில் என்ன செய்வார்கள்? ஆதவ் அர்ஜுனா விளக்கம்Tamil Nadu government has filed an appeal in the Supreme Court challenging the cancellation of the government jobs granted to the families of those who died in the Karur stampede.