தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் நிறமான சிவப்பு, மஞ்சள் நிறத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (டிஎன்எஸ்டிசி) மொபைல் செயலி மாற்றப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக போக்குவரத்துத் துறை மேம்படுத்தும் நோக்கில் பழைய டெண்டர்களை ரத்து செய்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட டிஎன்எஸ்டிசி செயலியின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த செயலி, தற்போது சிவப்பு, மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டு, பயனர்களுக்கு அப்டேட் ஆகியுள்ளது.முகப்பில் இடது புறம் முதல்வர் விஜய்யின் புகைப்படமும், வலதுபுறம் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்றுள்ளது.இருப்பினும், டிஎன்எஸ்டிசி-யின் வலைதளத்தின் நிறம் இதுவரை மாற்றப்படவில்லை.சில நாள்களுக்கு முன், அரசுப் பேருந்துகளின் நிறத்தை தவெக கொடியின் நிறமான சிவப்பு, மஞ்சளில் மாற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தின.முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் பச்சை நிறத்தில் இருந்த பேருந்துகள், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.TNSTC App Switches to TVK Flag Colorsசெந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! தலைமறைவா?