இந்தியாவில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த முதல் ஹாலிவுட் படமாக ஸ்பைடர்மேன்!

Wait 5 sec.

இந்தியாவில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த முதல் ஹாலிவுட் படமாக ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே சாதனை படைத்துள்ளது.கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம், இந்தியாவில் வியாழக்கிழமையில் (ஜூலை 30) வெளியானது.2021-ல் ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே வெளியாகியுள்ளது. இதற்கிடையில் வெளியான மார்வெல் படங்கள் அவ்வளவாக எதுவும் வரவேற்பு பெறவில்லை.மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும், எம்சியூவின் ஸ்பைடர்மேன் சீரியஸின் 4வது படமாகவும் வந்திருக்கிறது, ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே.இந்த நிலையில், இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ. 72.44 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாளிலேயே அதிகம் வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்ற சாதனையை ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே பெற்றுள்ளது.இதற்கு முன்னதாக அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் முதல் நாள் வசூல்தான் (ரூ. 60 கோடி) சாதனையாக இருந்தது. அதனை ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஷாருக்கானின் பதான் மற்றும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் முதல் நாள் வசூலையும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே முறியடித்துள்ளது.காதலும் அதிரடியும்: ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைவிமர்சனம்Tom Holland's Spider-Man Brand New Day Box Office Collection Day 1