நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தாக்குதலுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, " பிரதமர் மோடி அவர்களே, 10 நாள்களுக்கு முன்பாக, உங்கள் அரசு (பாஜக) இளைஞர்கள் மீது தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியது. மாணவர்கள் தங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையின்பேரில் போராட்டத்தை திரும்பப் பெற்றதும், இப்போது நீங்கள் பழிவாங்கும் உணர்வில் அவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்கிறீர்கள். அவர்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கிறீர்கள். இளைஞர்களின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்குகிறீர்கள். பெண்களின் தனிப்பட்ட தகவல்களைக் கசிய விடுகிறீர்கள்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் காலடிகூட எடுத்துவைக்கவில்லை. அவர் பொறுப்பு கூறுவதற்கும் பயப்படுகிறார். அமித் ஷாவை ராஜிநாமா செய்யச் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.தோல்வியடைந்த அமித் ஷா பதவி விலக வேண்டும்: சிஜேபி நிறுவனர் அபிஜீத்Congress leader Mallikarjun Kharge has urged Home Minister Amit Shah to resign