நடிகர் சூரி நடித்துள்ள மண்டாடி படத்தின் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “மண்டாடி”. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் மண்டாடி மண்டாடி பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடலில் நடிகர் சூரி மிகச்சிறப்பாக நடனமாடியுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், இதே பாடலுக்கு பலரும் நடனமாடி, ரீ-க்ரியேட் செய்து ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். சூரியின் மண்டாடி பாடலுக்கு நடனமாடி, இதுவரையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீல்ஸ் வெளியாகியிருப்பதாக சூரி பதிவிட்டுள்ளார்.இதே பாடலுக்கு சூரியுடன் நடிகர் விமலும் சேர்ந்து நடனமாடும் விடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.ராமாயணா - ராமனைவிட அதிகம் கவனம் ஈர்த்த ராவணன்... ஆனால்!Soori's 'Mandadi' reels takes the internet