தமிழகத்தில் பொதுமக்களில் பலரும் மின் கட்டணம் தொடர்பாக பாதிக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "3.7 லட்சம் புகார் வந்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வாட்ஸ் ஆப்பில் வந்த ஏதோவொரு தவறான தகவலைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.பலருக்கும் மின் கட்டணம் அதிகம் வந்திருப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.கடந்தாண்டுடன் இந்தாண்டு ஒப்பிடுகையில், கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் (கோடை) 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு அளவில் மின் கட்டணம் வந்தது. ஆனால், இந்தாண்டில் 9.60 லட்சம் பேருக்குத்தான் அதிகரித்துள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டில் 2 லட்சம் பேர் குறைந்துள்ளனர்.மக்களைக் குழப்புவதற்காகவே மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதுபோல 3.70 லட்சம் புகார்களெல்லாம் வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க. ஸ்டாலின்M.K. Stalin is spreading misinformation regarding electricity charges, says Minister Nirmal Kumar