ஜிஎஸ்எல்: 85 ரன்கள் இலக்கைக் கட்டுப்படுத்தி, த்ரில் வெற்றியுடன்கோப்பையை தக்கவைத்த கயானா!

Wait 5 sec.

குளோபல் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் 85 ரன்களை இலக்காக நிர்ணயித்தும், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இரண்டாவது முறையாக இந்த குளோபல் சூப்பர் லீக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த சீசனில் இந்த அணிதான் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் நடத்தும் குளோபல் சூப்பர் லீக் போட்டிகள் கடந்த 2024 முதல் நடைபெறுகின்றன. இதனை கிளைவ் லாய்டு தலைமையேற்று நடத்துகிறார். பல நாடுகளில் டி20 லீக்கில் வெற்றிப் பெற்ற அணிகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் போல நடத்தப்படுகிறது. இதில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இந்த சீசனின் இறுதிப் போட்டியில் கரீபியன் சாம்பியன்ஷிப்பான கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் எம்எல்சி சாம்பியனான சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கயானா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் 18.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மேத்திவ் போர்டு 28, பிரிடோரியஸ் 17, இம்ரான் தாஹிர் 11 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். சான்பிரான்சிஸ்கோ அணி பந்துவீச்சில் பீட்டர் சிடில், அனிருத் இம்மானுவேல் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 18.3 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக ஆலிவர் பீக்கி 31, பீட்டர் சிடில் 13 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். கயானா அணி சார்பில் பந்துவீச்சில் பிரிடோரியஸ், முகமது நபி தலா 3 விக்கெட்டுகள், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்கள். ஆட்ட நாயகனாக டிவைன் பிரிடோரியஸ், தொடர் நாயகனாக முகமது நபி தேர்வானார்கள். So nice, they did it TWICE! 2026! #GSL3Final #GSLSuperWe #GSLT20 #GlobalSuperLeague #GAWvSFU pic.twitter.com/xxqhGT1B8K— Global Super League (@gslt20) August 2, 202691 பந்துகளில் 233 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம்!Global Super League Guyana defends the trophy with a thrilling victory after restricting the target to 85 runs!