மங்காத்தா - 2 திரைப்படம் உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித் குமார் நடித்த திரைப்படங்களிலேயே அவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்த திரைப்படமாக மங்காத்தா இருக்கிறது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், இப்படத்திற்குப் பின் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா - 2 திரைப்படத்தில் அஜித் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு 2027 ஆம் ஆண்டு தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரோடு இருக்கும் வரை இனி சேரப்போவதில்லை: ரவி மோகன்Reports indicate that there is a possibility of a Mankatha 2 movie being made.