இயக்குநர் இளன் நாயகனாக நடிக்கும் “பியார் பிரேமா கல்யாணம்” திரைப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது. பியார் பிரேம காதல் மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் இயக்குநர் இளன். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. இயக்குநர் இளன் இயக்கி நாயகனாக நடிக்கும் படத்துக்கு “பியார் பிரேமா கல்யாணம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகின்றது. இந்த நிலையில், ”பியார் பிரேமா கல்யாணம்” திரைப்படத்தின் கதாநாயகன் அறிமுக விடியோவை படக்குழு இன்று (ஜூலை 30) வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.காதலும் அதிரடியும்: ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைவிமர்சனம்The introductory video for the film "Pyaar Prema Kaadhal," starring director Elan as the lead actor, has been released.