சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து

Wait 5 sec.

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, போராட்டத்தில் கலந்து கொண்டோர் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து என 3 கோரிக்கைகள் மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் வைத்தனர்.போராட்டம் தொடங்கி 36 நாள்களுக்குப் பிறகு, ஜூலை 25 ஆம் தேதியில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.இந்த நிலையில், போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட 13 வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாகவும், போராட்டத்தின்போது தடுத்து வைக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.மேலும், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு!Jantar Mantar protest: No police action against protesters