கேரள மாநிலத்தின் முதலமைச்சர் வி.டி. சதீசன் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர் குறித்து, “கேரளம் மிகுந்த பெருமையடைகிறது” எனக் கூறியுள்ளார். கிளாஸ்கோ காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் (27 வயது) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.முரளி ஸ்ரீசங்கர் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிர்மிங்கமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேரள மாநில முதல்வர் வி.டி. சதீசன் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: எங்களுடைய முரளி ஸ்ரீசங்கர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காமன்வெல்தில் இது அவருக்கு தொடர்ச்சியாக இரண்டாவது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கேரளத்தின் விளையாட்டு மரபுக்கு மற்றுமொரு தங்கமான அத்தியாயத்தைச் சேர்த்துள்ளார். ஸ்ரீசங்கருடன் தொலைப்பேசியில் பேசினேன். அவரது அசாத்தியமான சாதனைக்கு வாழ்த்துகள் கூறினேன். நாங்கள் பேசும்போது அவர் நம்முடைய கேரள மாநில விளையாட்டை மேலும் பலப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். நமது மாநில அரசாங்கம் முழுக் கவனத்துடன் செயல்பட்டு அதற்கு முடிந்தளவுக்கு முன்னுரிமை அளிப்போம் எனக் கூறினேன். கேரளம் உங்களது மன உறுதி மற்றும் அற்புதமான சாதனையினால் மிகுந்த பெருமை கொள்கிறது ஸ்ரீசங்கர் எனக் கூறினார். Heartiest congratulations to our very own @SreeshankarM on winning the silver medal in the long jump at the Glasgow 2026 Commonwealth Games.With his second consecutive Commonwealth Games silver medal, he has become the first Indian to win back-to-back Commonwealth Games medals… pic.twitter.com/3GiEOqnmJi— V D Satheesan (@vdsatheesan) July 30, 2026சீருடையின் நிறம் காவிக்கு மாற்றியது ஏன்? ஹாக்கி இந்தியாவின் தலைவர் விளக்கம்!Keralam is immensely proud of your grit and outstanding achievement, Sreeshankar says VD Satheesan