ராமாயணா - ராமனைவிட அதிகம் கவனம் ஈர்த்த ராவணன்... ஆனால்!

Wait 5 sec.

ராமாயணா திரைப்படத்தின் டிரைலர் பான் இந்திய மொழிகளில் வெளியாகி அசத்தலான வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கல், சிச்சோர் படங்களுக்குப் பிரபலமான இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் வெளியிடப்பட்டது. நேரடியாக ஹிந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் மற்ற பான் இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்த டிரைலரில் ஒவ்வொரு காட்சிகளுக்குமான விஎஃப்எக்ஸ் பணிகள், செரிவான ஒளியமைப்புகள் அனைத்தும் அபாரமான அனுபவத்தைக் கொடுப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுவாரஸ்யமாக, டிரைலரின் முதல் காட்சியே ராவணனான யஷ், எப்படி அரசனாக மாறினார் எனக் காட்டப்பட்டு பின் ராமனை அறிமுகம் செய்கின்றனர். நடிகர் யஷ். ராமர் தோற்றத்தில் பொருத்தமானவராக ரன்பீர் கபூர் தோன்றினாலும் நடிகர் யஷ் ராவணன் கதாபாத்திரத்தில் மிக கம்பீரமாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இருந்தாலும், ஹிந்தி மொழியில் யஷ்ஷின் குரல் மென்மையாக இருப்பதால் தமிழ் மொழி டப்பிங்தான் ராவணன் என்கிற பிம்பத்தைக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த டிரைலரில் அனுமன் கதாபாத்திரம் காட்டப்படவில்லை என்பது ஏமாற்றத்தை அளித்ததாகவும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி வெளியீட்டு டிரைலர்!The trailer for the movie Ramayana has been released in pan-Indian languages ​​and has received a tremendous response.