இழிவாக பேச மாட்டார் மேன்மக்கள்

Wait 5 sec.

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும், தம்வாயாற்பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை, நீர்த்தன்றிக்கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற், சொல்பவோ,மேன்மக்கள் தம்வாயான் மீட்டு?.(பாடல் 70 அதிகாரம்: சினம் இன்மை) நாயானது நம்மீது கோபித்து நம்மைக் கெளவிக் கொள்ளுதலைக் கண்டும், அதனாற் சினங்கொண்டு மீண்டும் அந்த நாயை நாம் நம் வாயாற் கெளவுதல் இந்த உலகத்திலே இல்லை.அதனால், கீழ்மக்கள், குணம் உடையதல்லாமல் கீழ்த்தரமான பேச்சுக்களையே பேசினாலும், அதனால் சினங்கொண்டு மேன்மக்கள், திரும்பவும் தம் வாயால் அவர்களை அப்பேச்சுக்களால் ஏசுவார்களோ?