முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பின்வருமாறு காணலாம்.முதலமைச்சர்ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.முதலமைச்சரின் பதவிக்காலம் நிலையான ஒன்று அல்ல. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளவரை முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாம். சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழக்கும்போது அவர் பதவி விலகுதல் வேண்டும். முதலமைச்சர் பதவி விலகுதல் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுதலைக் குறிக்கும். முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். முதலமைச்சராக பதவி ஏற்கும்போது உறுப்பினராக இல்லாவிட்டால் 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.மாநில முதலமைச்சர், அமைச்சரவையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனைகளை வழங்குகிறார். மேலும், அவர் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார். மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியாக இருக்கும்.மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.Regarding the powers and functions of the Chief Minister...யுபிஎஸ்சி: பிளாசிப் போர் முதல் இந்தியா சுதந்திரம் அடைவது வரை!