வதந்தி சீசன் 2: டிரைலர் வெளியீட்டு விழாவில் கவனம் ஈர்த்த ரேவதி சர்மா!

Wait 5 sec.

வதந்தி சீசன் 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை ரேவதி சர்மாவின் க்யூட்டான புகைப்படங்கள், விடியோக்கள் கவனம் பெற்றன. கேரளத்தைச் சேர்ந்த ரேவதி சர்மா சென்னையில் வசித்து வருகிறார். இங்கேயே வளர்ந்த அவர் முதல்முறையாக 2023ல் கௌதம் கார்த்திக்கின் ஆக.16, 1947 என்ற படத்தில் அறிமுகமானார்.நடிகர் சூரியின் கருடன் திரைப்படத்தில் நாயகியாக நடித்த ரேவதி சர்மா தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றார். பின்னர், மலையாளத்திலும் நடித்து வருகிறார். கடைசியாக அவர் 2025ல் நடித்த தலவாரா (Thalavara) என்ற மலையாள திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, வதந்தி சீசன் 2 தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடரில் சசிகுமார், எஸ். ஜே. சூர்யா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியுள்ளார். 8 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வரும் ஆக.7ஆம் தேதி வெளியாகிறது.இதற்காக நடத்தப்பட்ட டிரைலர் வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியில் நடிகை ரேவதி சர்மாவின் க்யூட்டான ரியாக்‌ஷன்களை ஒளிப்பதிவாளர்கள் பதிவுசெய்தார்கள். இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. View this post on Instagram இந்தியாவில் ரூ.215 கோடி வசூலைக் கடந்த ஸ்பைடர்மேன் திரைப்படம்!Vadhandhi Season 2: Revathi Sharma grabs attention at the trailer launch event!